டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதங்களை பயன்படுத்தும் பிரபலங்கள் சிலர் அவ்வப்போது சில விளம்பரங்ளை பதிவேற்றுவதை பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இந்த விளம்பர இடுகைகளுக்காக இவர்கள் ஒரு குறிப்பிட்ட பணத்தை பெறுகின்றனர் அந்த விளம்பர நிறுவனங்களிடமிருந்து.
இப்படியாக உலக கால்பந்தில் தவிர்க்க முடியாத ஜாம்பவான் கிறிஸ்டினா ரொனால்டோ. இவர் அவரின் சமூக வலைதள பக்கங்களில் பல கோடி நபர்களை தொடர்பாளராக வைத்துள்ளார்கள் என்றால் ஒரு விளம்பரத்திற்கு சராசரியாக இந்திய மதிப்பிற்கு 11கோடியே 30லட்சம் பெறுகிறாராம்.
இந்தியாலில் பிரபல சமூக வலைதளர்களாகிய இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் தலா 65லட்சம் தொடர்பாளர்களை அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வைத்துள்ளனர்.
பிரியங்கா சோப்ரா விளம்பரம் ஒன்றுக்கு 3கோடி ரூபாயும், விராட் கோலி விளம்பரம் ஒன்றுக்கு 5கோடி ரூபாயும் வாங்குகின்றனர்.
இந்திய அளவிலும் உலக அளவிலும் டிரண்டிங் ஆன பிரபலங்கள்இப்படி இருக்க தமிழ்நாட்டு பிரபலங்கள் சில லட்சங்களை வாங்குகிறார்களாம். நம்ம பக்கமும் தான் இருக்கே.

இதற்கு ஒரு சில ரசிகர்கள் நம் மூலம் தான் சமூக வலைதளப் பக்கத்தில் ஏகப்பட்ட பக்கங்கள் வைத்துள்ளோம் ஆனால் நமக்கு 10 பைசா கூட வருவதில்லை என புலம்பி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தமிழ்நாட்டில் இருக்கும் தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகைகள் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நபர்கள் அவர்களது சமூக வலைத்தள பக்கத்தை தொடர்வதால் சிறு சிறு நிறுவனங்கள் அவர்களிடம் விளம்பரத்திற்காக மேக்கப் பொருட்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைன் பற்றி பெருமையாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டால் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுக்கிறார்கள்.
அப்படி பணம் வாங்கிக் கொண்டு அந்த பொருட்களின் தரம் தெரியாமல் விளம்பரம் செய்யும் நடிகர் நடிகைகள் இங்கு ஏராளமானோர் உள்ளனர் அதில் யாரும் நான் குறிப்பிட வேண்டியதில்லை உங்களுக்கே தெரியும். யார் யார் அந்த செயலில் செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதை நீங்கள் கமெண்ட் பாக்சில் பதிவு செய்யலாம்.