500 கோடி கொட்டியும் செலக்ட் ஆகாத ஆர்ஆர்ஆர்.. ஆஸ்காருக்கு தேர்வான ஒரே மினி பட்ஜெட் இந்தியன் மூவி

95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. பட தொகுப்புகளின் லிஸ்ட் சமர்பிப்பதற்கு நவம்பர் 15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பரில் முதற்கட்ட தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. தேர்வுகள் முடிவடைந்து ஜூரிகள் முன்னிலையில் விருதுக்கான படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

நடிகர்கள் எத்தனை திறமையுடன் நடித்தாலும், எவ்வளவு பட்ஜெட் போட்டாலும், எத்தனை கோடி வசூல்களை அள்ளினாலும் திரை உலகை பொறுத்தவரை ஆஸ்கர் என்பது மிகப்பெரிய கனவு. சினிமாவை சேர்ந்த பல துறைகளுக்கு இந்த ஆஸ்கரில் விருது வழங்கப்படும். சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் திரைப்படங்கள் அனுப்பப்படும்.

முதலில் அந்த அந்த நாடுகளிலேயே சிறந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியாக சில கேட்டகிரிகளில் பில்டர் செய்யப்பட்டு தான் ஆஸ்கர் தேர்வுக்கே அனுப்புவார்கள். அந்த வரிசையில் இந்த முறை இந்தியாவில் ராக்கேட்டரி, பிரம்மாஸ்திரா, காஷ்மீர் பைல்ஸ், ஆர்ஆர்ஆர் , செல்லோ ஷோ, இரவின் நிழல் திரைப்படங்கள் செலெக்சனுக்கு சென்று இருந்தன.

இந்த படங்களை எல்லாம் ஒப்பிடும் போது ஆர்ஆர்ஆர் தேர்வாகும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு காரணம் ஆர்ஆர்ஆரின் பட்ஜெட். இயக்குனர் ராஜ மௌலி இயக்கத்தில் 550 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா மூவியாக இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மொத்த வசூல் உலக அளவில் 1500 கோடி ஆகும். ஆனால் இந்த படம் இந்திய அளவிலேயே செலக்ட் ஆகாமல் போனது அதிர்ச்சியாகவே உள்ளது.

இந்தியாவில் இருந்து இப்போது ஒரே படம் தான் இப்போது ஆஸ்கர் தேர்வுக்கு சென்று இருக்கிறது. அது குஜராத்தி திரைப்படமான செல்லோ ஷோ. பான் நளின் இயக்கத்தில், சித்தார்த் கபூர் தயாரித்து இருக்கிறார். சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் குறைந்த பணம் கொடுத்து ப்ரோஜெக்சன் அறையில் அமர்ந்து படங்களை பார்த்து தன்னுடைய கோடை விடுமுறையை கழிப்பதாய் இந்த படத்தின் கதை அமைந்து இருக்கிறது.

550 கோடியில் மிகப்பெரிய ஸ்டார்ஸ் சேர்ந்து எடுத்த படமான ஆர்ஆர்ஆர் , ஒரு 9 வயது சிறுவனை மையமாக கொண்ட மினி பட்ஜெட் படமான செல்லோ ஷோ விடம் தோற்று இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. இது பற்றி இரவின் நிழல் இயக்குனர் பார்த்திபன் கூறுகையில், எந்த சிபாரிசும் இல்லாமல் என் படம் தேர்வு வரை சென்றதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் அவருடைய ட்வீட்டர் பதிவில் “மகிழ்ச்சி!எந்த extra சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்ப தகுதியான ஒன்றிரண்டு படங்களில் ஒன்று “Last film show” குஜராத்தி படம்.(cinema paradiso பாதிப்பில்) Film to digital என்ற விஞ்ஞான வளர்ச்சியில் சிக்குண்ட சில உள்ளங்களில் என்னுடையதும் ஒன்று!அதை continue” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.