சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த கதை தெரியுமா.. உண்மையை உடைத்த பிரபலம்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தானாக முயன்று சினிமாவில் இந்த உயரத்தை அடைந்துள்ளார். சின்ன திரையில் ஜொலித்துக் கொண்டிருந்தவர் தற்போது தமிழ் திரையுலகத்திலும் நீங்காத இடத்தில் உள்ளார்.

இவரது முதல் படம் “மெரினா”, இந்த படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தற்போது அடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த கதை தெரியுமா..

அதாவது இவர் “வாகை சூடவா” படத்தின் ஆடியோ லாஞ்சில் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளார். சிவகார்த்திகேயன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். அப்போது இவர் கூறும் Timing comedy-யை பார்த்து அனைவரும் கைதட்டி ரசித்தனர்.ஏன் நானும் கூட அவரை ரசித்தேன்.

தனது காமெடியால் இத்தனை மக்களின் கைத்தட்டலையும் பெறுவது என்பது பெரிய விஷயம் அதை அவர் அசால்டாக செய்து கொண்டிருந்தார். பிறகு நான் மெரினா படத்திற்கு ஏற்கனவே ஒரு நடிகரை தேர்ந்தெடுத்து விட்டேன். அந்த நடிகர் ஒரு கவிஞரின் பேரன். அவர் ஒரு பைக் ரேஸரூம் கூட, அப்படிப்பட்ட ஒரு நடிகரை தான் நானும் தேடினேன்.

பிறகு எதார்த்தமாக சிவகார்த்திகேயனை ஒரு பெண்ணிடம் பேச சொல்லி எக்ஸாம்பிள் வீடியோ எடுத்தோம். அந்த வீடியோ கூட என்னிடம் இன்றும் இருக்கிறது. அதை பார்த்து எனக்கு சிவகார்த்திகேயனை பிடித்து விட்டது. பிறகு இவரை மெரினா படத்தில் நடிக்கவைத்தேன்.

ஆனால் இன்று சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகத்தில் உச்சத்தில் உள்ள நடிகர். இந்தளவிற்கு இவர் வளர்ந்து நிற்ப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமல்லாமல் இந்த வளர்ச்சி அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு என்றும் இயக்குனர் பாண்டிராஜ் வெளிப்படையாக சிவகார்த்திகேயனை பற்றி கூறியுள்ளார்.