மதராஸிக்கு முருகதாஸ் போட்ட ஸ்கெட்ச்.. சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்

Sivakarthikeyan : அமரன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் உருவாகி வருகிறது. ஏ ஆர் முருகதாஸ் ஒரு காலத்தில் நம்பிக்கை இயக்குனராக இருந்து வந்தார்.

ஆனால் சமீபகாலமாக அவர் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். இதனால் அவரால் வெற்றி பெற்ற நடிகர்களே அவருடைய படத்தில் நடிக்க தயங்குகிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸை நம்பி இறங்கி இருக்கிறார்.

மேலும் மதராஸி படம் செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான முக்கிய அப்டேட் இந்த வாரம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் முருகதாஸ் சமீபத்திய ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார்.

சிவகார்த்திகேயனுக்கு முன்னதாக மதராஸி படத்தில் நடிக்க இருந்த ஹீரோ

அப்போது பேசிய அவர் இந்த படத்தின் கதையை எட்டு வருடங்களுக்கு முன்பே ஷாருக்கான் இடம் கூறியிருந்தாராம். அதுமட்டுமல்லாமல் இந்த கதை பிடித்துப் போனதால் நடிக்கவும் சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஷாருக்கானுக்கு முருகதாஸ் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்.

ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அதன் பிறகு இப்போது சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியதாம். இதனால் கதையை கொஞ்சம் விரிவுபடுத்தி சிவகார்த்திகேயனை நடிக்க வைத்ததாக கூறி இருக்கிறார்.

ஆகையால் ஷாருக்கான் பட வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு ஜாக்பாட் ஆக அமைந்திருக்கிறது. பெரிய நடிகர்களே தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் தானும் வெற்றி பெற்ற முருகதாஸை தூக்கி விடுகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.