ருக்மணி வசந்த் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் தற்போது வலம் வருகிறார். 2019-ல் பீர்பால் மூலம் அறிமுகமான அவர், சப்த சாகரதாச்சே எல்லோ படத்தால் புகழ் பெற்றார்.
தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2025 ஆம் ஆண்டு வெளிவந்த ACE படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியை தழுவியது என கூறலாம்.
ருக்மணிக்கு குவியும் பட வாய்ப்பு
இதை தொடர்ந்து இவர் தற்போது ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் 5 செப்டெம்பர் 2025 அன்று திரையில் வெளிவர இருக்கிறது.
மேலும் இவர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் காந்தாரா சாப்டர் 1 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். 2 அக்டோபர் 2025 வெளிவரும் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இதையடுத்து ருக்மணி வசந்த் கீது மோகன்தாஸ் இயக்கதில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் டாக்ஸிக் படத்தில் நடிகர் யாஷ் உடன் நடித்து வருகிறார். இந்த படம் மார்ச் 19, 2026 அன்று திரைக்கு வரவுள்ளது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும், தற்காலிகமாக “NTR Neel” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம், பான் இந்தியா அளவில் 2026 ஜூன் 25 அன்று வெளியாக உள்ளது. இதில் தமிழ் டப்பிங் வெளியீடும் இடம்பெறும்.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என் டி ஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கின்றன. வரலாற்று பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் கதையாக இருக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய ரோல் செய்துவருகிறார். இந்த அனைத்து படங்களும் ருக்மணி வசந்தின் பிரபலத்தை இந்தியா முழுவதும் மேலும் உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.