தமிழ் சினிமாவில் முத்து எங்கள் சொத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேணு அரவிந்த். அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார் . டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகும் பணியாற்றியுள்ளார் மேலும் சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அதன்பிறகு இவர் காதல் பகடை, அலைகள், வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து சீரியல்களிலும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் உள்ள நன்கு பிரபலம் அடைந்தார்
சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு இவருக்கு நிமோனியா தாக்குதலும் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு இவருக்கு மூளையில் கட்டி இருக்க அதனை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பின்பு இவர் கோமாவிற்கு சென்றுள்ளார். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இவருடன் பணியாற்றிய சினிமா கலைஞர்கள் பலரும் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இவர் எப்போது குணமடைவார் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.