10-20 போட்டிகளோடு ரிட்டையர்டுடாகி பாவமாய் வீட்டுக்கு போன 5 கிரிக்கெட்டர்ஸ்.. இங்கிலாந்து இழந்த யுவராஜ் சிங்

கிரிக்கெட்டில் திறமை மட்டும் இருந்தால் போதாது, உடற்பகுதியும் வேண்டும் அப்படி தகுதி இல்லாமல் அன்பிட்டாக கிரிக்கெட் கேரியரையே தொலைத்த 5 வீரர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 30 வயதிற்குள் ரிட்டையர்டுடாகி உள்ளனர்.

உன்முகத் சந்த்: 2012ஆம் ஆண்டு அண்டர்19 உலக கோப்பை போட்டி ஃபைனலில் சதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்தவர் உன்முகத் சந்த். பல திறமைகள் இருந்தும் இந்திய அணிக்கு இவர் தேர்வாகவில்லை அதனால் 28 வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அமெரிக்கா சென்று விட்டார்.

கிரேக் கெய்ஸ்வெட்டர்: இங்கிலாந்து அணியில் அதிரடி வீரராக இவர் ஓப்பனிங் இறங்கி இரண்டு ஆண்டுகள் மிரட்டினார். ஆனால் இவருக்கு கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக 20 போட்டிகளில் விளையாடுவதற்குள் ரிட்டையர்டுடாகி விட்டார்.

ஜேம்ஸ் டெய்லர்: இவர் விளையாடுவதை பார்த்து அடுத்த வலது கை யுவராஜ் சிங் என பெயரை வாங்கினார். இவர் அதிரடி ஆட்டமும்,ஸ்டைலையும் பார்ப்பதற்கு அப்படியே யுவராஜ் சிங் போல் இருக்கும். இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதால் இவர் 20 போட்டிகள் விளையாடுவதற்குள் ஓய்வு பெற்றுவிட்டார்.

டட்டன்டா தைபு: 20 வயதில் ஜிம்பாவே அணிக்கு கேப்டனாக விளையாடியவர் இவர். தன்னுடைய மதம் மீது கொண்ட பற்றினால் சீக்கிரமே விளையாட்டை ஓரங்கட்டி விட்டு மத போதகராக மாறிவிட்டார். 29-வது வயதில் ஓய்வு பெற்று விட்டார்.

முகமது அமீர்: இவர் தனது 27வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். பாகிஸ்தானின் நட்சத்திர பவுலரான இவர் எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாக இருப்பார். பாகிஸ்தான் அணியில் உள் நடக்கும் பிரச்சனை காரணமாக இவர் அணியில் இருந்து வெளியேறி விட்டார்