Actor Kamal: உலக நாயகன் கமலுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் பல நடிகைகளுடைய கனவாக இருந்து வருகிறது. இது சிலருக்கு கிடைத்தாலும் பலருக்கு கைகூடாமல் போய் உள்ளது. இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் கமலின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
அதன்படி ஒரு வாய்ப்பும் கமலின் படத்தில் கிடைத்திருந்தது. ஆனாலும் அந்தரங்கத் தொழில் செய்யும்படியாக பலான காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. ஆனால் எதைப் பற்றியும் யோசிக்காத நடிகை கமலுக்காக அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
அதாவது கமலின் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தான் அவர். பொதுவாக கதாநாயகிகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களை துணிச்சலாக ஏற்று நடிக்க கூடியவர்தான் ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் ஹீரோயின் மெட்டீரியலாக இருக்கும் நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள்.
ஆனால் ரம்யா கிருஷ்ணன் துணிச்சலாக படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த நிலையில் தற்போது வரை அந்த பெயர் நிலைத்து நிற்கிறது. இந்த படம் ஒற்றுக்கொள்ள காரணம் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என்று ரம்யா கிருஷ்ணன் கூறியிருந்தார்.
அதேபோல் தான் கமலுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக பஞ்சதந்திரம் படத்தின் ஆஃபர் வந்தபோது ஒத்துக்கொண்டாராம். இதில் பலான காட்சியில் நடிக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை என்று ரம்யா கிருஷ்ணன் கூறியிருக்கிறார். அதன் பிறகு அவரது சினிமா கேரியர் என்ன ஆகும் என்ற கேள்விக்குறியும் இருந்ததாம்.
ஆனால் அப்போது தனது மனதில் இருந்த ஒரே விஷயம் கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான். நீலாம்பரி எப்படி இப்போது வரை பேசப்படுகிறதோ அதேபோல் ரம்யா கிருஷ்ணனின் மேகி கதாபாத்திரமும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இப்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.