Maaveeran Movie Actor: நடிகர் ஒருவர் ஜெயிலர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இடையே, அப்பப்போ சின்ன படங்கள் வந்து பட்டைய கிளப்பி வருகிறது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி விட்டிருந்தார். இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருப்பது தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஷீலா ராஜ்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நூடுல்ஸ் படத்தை அருவி மதன் குமார் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெற்றிருக்கிறார்.
தரமான கதைகளைக் கொண்ட நூடுல்ஸ் திரைப்படம், சமீபத்தில் வெளியான டாடா, குட் நைட், போர் தொழில் போன்ற கம்மியான பட்ஜெட்டில் அதிக லாபம் பார்க்கக் கூடிய படங்களின் வரிசையில் சேர காத்திருக்கிறது. அதேபோலவே இப்பொழுது ஒரு இயக்குனர் யாரிடமும் அசிஸ்டண்டாக பணியாற்றியது கிடையாதாம்.
அவரை நாம் நிறைய படங்களில் நடிகராக பார்த்திருக்கிறோம். அவர் முதலில் நடிகராக தான் வந்தார். நடிக்கும் பொழுதே கற்றுக் கொண்ட விஷயம் தான் இந்த டைரக்சனாம். அயலி, துணிவு, மாவீரன் போன்ற படங்களில் வரும் நடிகர் மதன் குமார். அயலி வெப் சீரியஸில் அந்த குழந்தைக்கு தந்தையாக வருவார்.
இந்த படத்தில் அவர் ஒரு தந்தையாக தனது உணர்வு பூர்வமான நடிப்பை வெளி கட்டினார். அதுமட்டுமின்றி அருவி, மாவீரன் படத்தில் இவர் வில்லனாகவும் வருவார். இவர் இயக்கிய படம் நூடுல்ஸ். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி எல்லோரிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் எட்டாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும் நடிகரான மதன் குமாருக்கு இப்படி ஒரு திறமையா என்றும் சிலர் வியந்து பார்க்கின்றனர்.