ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் மற்றும் அஜித் இவர்களின் படங்களில் சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய மூன்று வயதில் இருந்தே நடிக்க தொடங்கி விட்டார். ஆறு மொழிகளிலும் 100க்கு மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவருக்கு குழந்தை நட்சத்திரத்திற்கான 2 தமிழ்நாடு விருதுகள் கிடைத்தது.
இவரின் முதல் படமான நாட்டாமை படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் பெரியளவில் பாராட்டினர். அதிலும் மின்சார கண்ணா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருக்கும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு எளிதில் எல்லாராலையும் மறந்து விட முடியாது. நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகர் தான் மாஸ்டர் மகேந்திரன்.
இவர் விழா எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவில் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தனக்கென அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் மாஸ்டர் மகேந்திரன் பட வாய்ப்புக்காக வேற லெவல்ல ஒர்க் அவுட் செய்து உடம்பில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். அதோட டான்ஸ் மற்றும் சண்டைகளையும் கற்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்து பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் மாஸ்டர் படத்தில் நடித்தும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் நல்ல வாய்ப்பிற்காக அலைந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், அனைவருமே இவரை இன்னும் ஒரு குழந்தை நட்சத்திரமாகவே நினைக்கிறார்கள். இதுவே இவரின் அடுத்தடுத்த படங்களுக்கு ஒரு தடையாக அமைந்து வருகிறது என்று சொல்லி இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக எல்லார் மனதிலும் இடம் பிடித்த இவரால் ஒரு நடிகராக வர முடியவில்லை.
இப்பொழுது இவர் நிறைய படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டாலும்,எந்த படமும் ரிலீஸ் ஆனதாக தெரியவில்லை. எல்லா தடைகளும் தாண்டி இவர் சினிமாவில் நடித்து ஒரு ஹீரோவாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.