பிரபலமாக வேண்டும் என அப்பாவை கொன்ற தனலட்சுமி.. காசுக்காக இப்படி எல்லாம் பண்ணலாமா!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் நிகழ்ச்சி சுவாரசியமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாரம் வாரம் எலிமினேஷனும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்தவுடனே பலருடனும் மல்லுக்கட்டி கோபத்துடன் பேசிய தனலட்சுமி என்ற டிக் டாக் பிரபலம் பலராலும் ஆரம்பத்தில் வெறுக்கப்பட்டார். பின்னர் கமலஹாசன் காண்பித்த குறும்படம், அந்த வீட்டில் அவர் பலராலும் விரும்பத்தக்க வகையில் மாறி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : வாடி போடி, நீ என்ன பெரிய இவளா குழாயடி சண்டையாக மாறிய பிக்பாஸ் வீடு.. தனலட்சுமி டார்கெட் செய்த அடுத்த நபர்

இருந்தாலும் தனலட்சுமி சில நேரம் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையை ஏற்படுத்தி தான் வருகிறார். இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையை பற்றி கூறி வந்த நேரத்தில், தனலட்சுமி தனக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் என தெரிவித்திருந்தார்.

அவர் அழுதழுது பேசியதை கேட்ட சக பிக் பாஸ் பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக அந்த சமயத்தில் இருந்தனர். இதனிடையே அன்மையில் தனலட்சுமியின் மூன்று நண்பர்கள் அவரது உண்மையான முகத்தை கூறி பல திடுக்கிடும் விஷயங்களை பகிர்நதுள்ளனர். தனலட்சுமிக்கு தந்தை உள்ளதாகவும் அவர் மெக்கானிக்காக இருப்பதாகவும் கூறினர்.

Also Read : 17 வயதிலேயே திருமணம், ஏகப்பட்ட லவ் பிரேக்கப்.. பிக்பாஸ் நடிகையைப் பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலன்

மேலும் தனலட்சுமி இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும், திரைப்படங்கள் இன்னும் ரிலீசாகாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் அவரின் தாயார் துணி கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறாராம். தனலட்சுமி வாங்கும் செருப்பின் விலையே 12ஆயிரமாம்.

அந்த அளவிற்கு அவர் கையில் பணம் உள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி கூறிய அத்தனை விஷயங்களும் பொய் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது தனலட்சுமியை கழுவி ஊற்றி வருகின்றனர். பிரபலம் அடைவதற்காக பெற்ற தந்தை உயிரோடு இருக்கும்போது அவர் இல்லை எனக் கூறுவது கொஞ்சம் கூட சரியில்லை எனவும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

Also Read : பொண்ணுங்களை தடவி ரொமான்ஸ் செய்தததற்கு சம்பளத்தை வாரி கொடுத்த பிக்பாஸ்.. கொடுத்த வச்ச கோளாறு