Rajinikanth: கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் ஸ்டைலை இதுவரையிலும் யாராலும் செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. உண்மையை சொல்ல போனால் ஸ்டைலாக நடிக்க வேண்டும் என்று நடிகர்கள் ஆசைப்பட்டாலும், இவர் ரஜினியை காப்பியடித்து விடுகிறார் என சொல்லி சோலியை முடித்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட சினிமா ரசிகர்கள் முழு மனதுடன் ஒருவர் ரஜினி போல் இருக்கிறார் என்ற ஒத்துக்கொண்டார்கள் என்றால் அது தனுஷின் மூத்த மகன் யாத்ரா தான். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தம்பதியினருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 2006 ஆம் ஆண்டு இவர்களுக்கு யாத்ரா பிறந்தார். அதைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு லிங்கா பிறந்தார்.
பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் என்றாலே ஆமாம் அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிறார் என்று சாஸ்திரத்துக்கு சொல்லி முடித்து விடுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தம்பதியினரின் மூத்த மகன் யாத்திரை, அவருடைய தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் வயதில் இருந்தது போலவே அப்படியே இருக்கிறார்.
இளம் வயது ரஜினியை போலவே இருக்கும் தனுஷின் மூத்த மகன்
சமீபத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அவருடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா கலந்து கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட யாத்ராவின் புகைப்படம் தான், தில்லு முல்லு ரஜினிகாந்த்தின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு இணையங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா உடனான விவாகரத்துக்கு பிறகு தனுஷ் அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் அவருடைய மகன்களை அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
யாத்ரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். யாத்ராவுக்கு நாய்கள் வளர்ப்பது ரொம்பவும் பிடித்த விஷயம். வீட்டிலேயே நான்கு நாய்கள் வளர்த்து வரும் யாத்ரா, மாலை வேளைகளில் போயஸ் கார்டன் பகுதியில் அந்த நாய்களை வாக்கிங் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

யாத்ரா இதுவரை எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய பயன்பாட்டை ஆரம்பிக்கவில்லை. இருந்தாலும் யாத்ரா, தனுஷ் உடன் இருக்கும் புகைப்படங்கள், ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படங்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமாக இருக்கின்றன. ரஜினியை போலவே அவர் இருப்பதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களால் இப்போதே தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.