Dhanush: ‘ தல வந்தா தள்ளி தானே போகணும்’, அதுக்குன்னு இந்த அளவுக்கா தள்ளி போகணும். ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக இருந்த தன்னுடைய இட்லி கடை படத்தின் தேதி தள்ளி வைக்கப்பட இருப்பதாக பட குழு அறிவித்தது.
அஜித்குமாரின் குட் பேட் அக்லி பட ரிலீஸ் சமயத்தில் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தனுஷ் முடிவு எடுத்து இப்படி பதுங்கி இருப்பதாக சொல்லப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் அஜித் vs தனுஷ் என்று புதிதாக கிளப்பப்பட்டது. கடைசியில் பார்த்தால் தனுஷ் வச்ச குறி அஜித்துக்கு இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
தனுஷின் பலே திட்டம்
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று சொல்வதற்கு நல்லா தான் இருக்கும். ஆனால் அந்த குருவின் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் அதன் வலி என்னவென்று தெரியும்.
அப்படித்தான் தான் ஹாலிவுட் வரை கலக்கினாலும், சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமா உலகின் அடுத்த தளபதி என்ற பெயரை வாங்கி இருப்பது தனுஷுக்கு கொஞ்சம் அசோகாரியமாக தானே இருக்கும்.
சினிமாவை பொறுத்த வரைக்கும் யார் நம்பர் ஒன் என்பதை முடிவு செய்வதே வசூல் தான். அதனால் தான் தனுஷ் முதன்முறையாக வசூல் மீது கவனம் செலுத்துவதற்காக இட்லி கடை படத்தை அக்டோபர் மாதம் தள்ளி வைத்திருக்கிறார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி ஆயுத பூஜை, இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி 3,4,5 வெள்ளி சனி ஞாயிறு என மொத்தம் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்து வசூலில் தன்னை நிலை நிறுத்திக் காட்டத்தான் இப்படி ஒரு முடிவு.