தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகைக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவர் நடித்த படம் வெற்றி அடைந்துவிட்டால் தொடர்ந்து அந்த நடிகைகளுக்கு சிலபல வாய்ப்புகள் கிடைக்கும். அதிலும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரஜிஷா விஜயன்(rajisha vijayan). மலையாளத்தில் பிரபல நடிகையான இவரை மாரி செல்வராஜ் கர்ணன் படத்தில் அறிமுகப்படுத்தினார்.
கர்ணன் படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ரஜிஷா விஜயனுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. அந்த வகையில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தியின் அடுத்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்தது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

வயதான தோற்றத்தில் வெளியான பஸ்ட் லூக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற ஒரு வரிசையில் ரஜிஷா விஜயன் இடம் பிடிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
