தனுஷ் சுக்கிர திசையை கெட்டியா பிடித்து வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஏனென்றால் அவரது படங்கள் வெற்றி படங்களாகவும், வசூலில் பெரிய லாபத்தை ஈட்டும் அளவிற்கு, ஒவ்வொரு படத்திலும் வளர்ச்சியை காட்டி வருகிறார். இது அனைத்தும் அவரது விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு.
அத்துடன் இப்பொழுது வரும் அனைத்து படங்களிலும் அசால்டாக 100 கோடி வசூலை தட்டி செல்கிறார். ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் சாதாரணமாக படத்தை நடித்துக் கொடுக்கும் நடிகராக மட்டும்தான் இருந்தார். பின்பு இவர் வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு கை கொடுத்தவர் வெற்றிமாறன். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் வேற லெவல்ல மாறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வடசென்னை, கர்ணன், அசுரன், திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி, இந்த படங்களில் எல்லாம் இவருக்கு ஒரு வசூல் சாதனையை கொடுத்து பெரிய அளவுக்கு இவரை உயர்த்தியது. அத்துடன் இவர் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
முக்கியமாக சமீபத்தில் வெளிவந்த வாத்தி படம் தெலுங்கில் சக்க போடு போட்டு வருகிறது. அங்குள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து விட்டார். அத்துடன் இப்பொழுது இவருக்கு ஹிந்தியிலும் செம மார்க்கெட் ஏறி இருக்கிறது. தற்போது இவர் பான் இந்தியா நடிகராக பிரபலமாகிவிட்டார்.
அத்துடன் இவர் ஹிந்தி, தெலுங்கு போன்ற படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். அதனால் அதிகளவில் பாதிப்படைந்தது சிவகார்த்திகேயன். இவர் நடித்து வெளிவந்த டாக்டர், டான் படங்களை எல்லாம் இப்பொழுது தனுஷ் பின்னுக்கு தள்ளி விட்டார். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் சரியாக ஓடாமல் போய்விட்டது. இதனால் வியாபார ரீதியாக கொஞ்சம் அடிபட்டுவிட்டார். ஆனால் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் டாப் க்கு போயிட்டு இருக்கிறார்.
தற்போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நல்ல வியாபாரம் அடைந்துள்ளது. இதை அதிக செலவு செய்து எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் சூட்டிங் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் படமும் தனுஷ்க்கு வெற்றி படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.