தனுஷுடைய சினிமா கேரியரிலும், வாழ்க்கையிலும் பல சருக்கல்களை சந்தித்து வருகிறார். ஆனாலும் தொடர்ந்து தனுசுக்கு நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
ஒரே டாப் ஹீரோ என்பதால் தனுஷ் இப்போதும் சினிமாவில் நிலைத்து நிற்க முடிகிறது. ஆனால் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய படங்கள் தோல்வியை தழுவியதால் ஹீரோக்கள் அவரது படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தனர். இனியும் இது வேலைக்கு ஆகாது என டைரக்ஷனை கைவிட்டு விட்டு நடிப்புக்கு வந்தார்.
அப்படி செல்வராகவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பகாசூரன் படமும் படுதோல்வி அடைந்துள்ளது. ஆகையால் இனி செல்வராகவனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல செல்வராகனுக்காக தனுஷ் உதவ உள்ளார்.
அதாவது தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி, நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம். ஆனால் இப்போது இந்த படத்தில் செல்வராகவனை நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டுள்ளாராம்.
அதாவது தனுசுக்கு எப்படி செல்வராகவன் நன்றாக கதை அமைத்துக் கொடுத்த சினிமாவில் வளர விட்டு அழகு பார்த்தார். அதேபோல் இப்போது செல்வராகவனுக்கு ஏற்றார் போல் தகுந்த கதாபாத்திரத்தை கொடுத்து பெரிய நடிகராக மாற்ற வேண்டும் என தனுஷ் ஆசைப்படுகிறாராம்.
மேலும் இந்த படத்திற்கு யோகன் என்ற தலைப்பு வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் கூட்டணியில் பொதுவாக இருந்த படத்தின் பெயரும் யோகன் தான். இப்போது படப்பிடிப்புக்கான வேலை மும்மரமாக நடந்து வருகிறதாம். ஆகையால் விரைவில் படத்தை குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.