சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைய தனுஷும் ஒரு வகையில் முக்கிய காரணம் தான். அதாவது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமானபோது தனுஷ் அவரது படங்களை தயாரித்தார். ஆனால் அதன் பின்பு இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது.
அந்த சண்டை தற்போது வரை இவர்களுக்குள் தொடர்ந்து வருகிறது. மேலும் தனுஷ் படம் வெளியானால் சிவகார்த்திகேயன் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் படம் வெளியானால் தனுஷ் ரசிகர்களும் இணையத்தில் சண்டையிட்டு வருகிறார்கள். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியாகி படுமோசமான தோல்வியை சந்தித்தது.
அதாவது சிலரின் சூழ்ச்சியால் தான் இந்த படம் தோல்வியை சந்தித்தது என கூறப்படுகிறது. வேண்டுமென்றே நெகடிவ் கமெண்ட்ஸ்களை பரப்பி படத்தை தோல்வி அடையச் செய்துள்ளனர். அந்த வகையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பிரின்ஸ் படத்தை கிழித்து தொங்க விட்டிருந்தார்.
பெரும்பாலானோர் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்து விட்டுதான் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் சிலரின் அறிவுறுத்தலின் படி தான் ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயன் படத்தை நார் அடித்துள்ளார் என கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் படி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது பிரின்ஸ் படத்தை பார்க்க ப்ளூ சட்டை மாறனுடன் தனுஷின் ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா சென்றுள்ளார். இந்த ஒரு விஷயமே போதும் தனுஷ் தரப்பினர் கொடுத்த அறிவுரதலின்படி தான் ப்ளூ சட்டை மாறன் இவ்வாறு செய்து உள்ளார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை தடுக்க சதி நடந்துள்ளது.
இவ்வாறு சிலர் நல்ல படங்கள் கொடுத்தாலும் இது போன்ற மோசமான விமர்சனங்களால் படம் படுதோல்வி அடைந்து வருகிறது. இந்த விஷயம் தனுஷுக்கு தெரிந்து நடந்ததா அல்லது தெரியாமல் நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் தனுஷின் விசுவாசிகளால் தான் சிவகார்த்திகேயனுக்கு பெருத்த அடி விழுந்துள்ளது.