Kamal-Dhanush: வாத்தி பட வெற்றிக்குப் பிறகு தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். கேப்டன் மில்லர் படப்பிடிப்பினை முடித்து உள்ள இவர் மேற்கொள்ளும் அடுத்த படம் தான் தனுஷ் 50. இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட காரணமும், படத்தில் இடம்பெறும் பிரபலங்களின் கதாபாத்திரத்தையும் இத்தொகுப்பில் காணலாம்.
கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் தானே இயக்கி, நடிக்கும் படம் தான் தனுஷ் 50. கேங்ஸ்டார் படமாய் இடம் பெற்ற இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். பல முக்கிய பிரபலங்கள் இடம்பெறும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆதித்யா ராமில் மேற்கொள்ளப்பட்டது.
இப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செட்டப் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டதாகவும். மேலும் கிட்டத்தட்ட 100 வீடுகள் இப்படத்திற்காக பிரத்தியேகமாக செட்டப் போடப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பெய்த மழையால் வீணாகி போனதாகவும் அதைக் கொண்டு படப்பிடிப்பு தடைப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
படத்திற்கு முக்கியமாய் பார்க்கப்படும் இத்தகைய செட்டபின் சேதாரத்தை சரி செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்தே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, இப்படத்தில் பிரபலங்களின் கேரக்டர்கள் லீக் ஆகி உள்ளது.
முக்கிய கதாபாத்திரம் ஏற்கும் தனுஷீக்கு அண்ணனாக எஸ் ஜே சூர்யா இடம்பெற உள்ளாராம். இதுவரை வில்லனாக தெறிக்கவிட்ட இவரின் கதாபாத்திரம் சற்று மாறுபட்டுள்ளது. மேலும் இவரின் மாறுபட்ட நடிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
அதை தொடர்ந்து விக்ரம் படத்தில் கமலின் மகனாய் ஸ்கோர் செய்த காளிதாஸ் ஜெயராம் இப்படத்தில் தனுஷின் தம்பியாகவும் இடம்பெற்று இருக்கிறாராம். விக்ரம் படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்த இவரின் கதாபாத்திரம் இப்படத்தில் ஸ்கோர் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.