Dhruv Vikram: ‘இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ என இளைஞர்கள் புலம்பித் தள்ளும் அளவிற்கு சம்பவம் நடந்திருக்கிறது.
கனவு கன்னியாக வலம் வரும் நடிகைகள் காதலில் விழுவது என்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் கொடுக்கும்.
அதே நேரத்தில் அந்த கனவுக்கன்னி பெண் ரசிகைகள் அதிகம் உள்ள ஹீரோவுடன் டேட்டிங் செய்தால் எப்படி இருக்கும்.
நெருக்கமான போட்டோ
ஆதித்ய வர்மா படத்தின் மூலம் விக்ரம் மகன் துரு விக்ரம் ஹீரோவாக அறிமுகமானார். இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி எதுவும் இல்லை என்றாலும் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.
இவர் நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

இருவரும் இணைந்து எந்த படமும் நடிக்கவில்லை என்றாலும் இவர்களுக்குள் எப்படி இவ்வளவு நெருக்கம் வந்தது என எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் வழக்கம் போல இந்த புகைப்படம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த புகைப்படம் குறித்து இரு தரப்பிலிருந்து யாராவது ஒருவர் விளக்கம் கொடுத்தால் தான் உண்மை தெரியும்.