லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடிய நிலையில், அந்தப் படத்திற்குப் பிறகு தற்போது தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் மும்பையை சேர்ந்த கேங்ஸ்டர் ஆக நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பெரிய திரை பட்டாளமே நடிக்க உள்ளது. அதிலும் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஸ்கின், விஜய் சேதுபதி போன்ற மிகப்பெரிய வில்லன்கள் சியான் விக்ரமும் உள்ளார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
அதிலும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் விக்ரம் இருந்த புகைப்படமும் அந்த விஷயத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி தளபதி 67 படத்தில் விஷால் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதற்காக லோகேஷ் விக்ரமிடம் கேட்டிருந்தார்.
ஆனால் விக்ரம் அந்த படத்தின் கதையை கேட்ட பிறகு படத்தில் விக்ரமுக்குக்கான காட்சி மிகக் குறைவாக இருப்பதால் அதை எப்படி நடிப்பது என்று ஒத்துக்கொள்ள வில்லையாம். இதனால் லோகேஷ் விக்ரமுக்கு தனி கதையை உருவாக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம். அதைவிட சுவாரசியம் என்னவென்றால் விக்ரம் 2 படத்தில் நிச்சயம் விக்ரம் நடிக்கிறாராம்.
ஏனென்றால் விக்ரம் படத்தில் முதலில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அந்தப் படத்திலும் தன்னுடைய போசன் கம்மியாக இருக்கிறது என அந்த வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டார். இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் கூப்பிடும்போதெல்லாம் விக்ரம் பேச்சுவார்த்தைக்கு வந்த ஒரே காரணத்தால், லோகேஷின் மீது நட்பு ரீதியாக மிகுந்த மதிப்பை வைத்திருப்பதால், நிச்சயம் லோகேஷ் விக்ரமுக்கு ஆக ஒரு படத்தை உருவாக்கும் துடிப்புடன் இருக்கிறாராம்.
மேலும் லோகேஷ் கனகராஜ்-கமல் இணையும் புதிய படத்திலும் விக்ரமுக்கு பெரிய போஷன் இருக்கும் கதாபாத்திரத்தை லோகேஷ் யோசித்து வைத்திருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் தளபதி 67 படத்தில் விக்ரம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.