கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தையும் அதே அளவுக்கு வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கமல் மிக மும்பரமாக வேலை பார்த்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது இறுதிகட்டப் படப்பிடிப்பிற்காக சவுத் ஆப்பிரிக்கா செல்கிறார். அத்துடன் இப்படத்தை மே மாதத்தின் இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்று வேலைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தை நடித்து முடித்துவிட்டு ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். அத்துடன் அங்கே இருக்கும் பொழுது அடுத்த படத்திற்கான சிறு சிறு வேலைகளையும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார். இவரின் அடுத்த படமானது மணிரத்தினத்துடன் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அஜித் இயக்குனரான எச் வினோத்துடன் கூட்டணி வைக்கிறார்.
ஆனால் அதற்காக வெறும் 35 நாட்கள் மட்டுமே கால் சீட் கொடுத்திருக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் இவர் கொடுத்திருக்கும் நாட்களைப் பார்த்தால் ஒரு லோ பட்ஜெட் படமாக தயாரிக்கப் போகிறார் என்பது தெரிகிறது. ஆனால் இவருடைய நோக்கமே இந்த படத்தின் மூலம் அதிக லாபத்தை பார்க்க வேண்டும் என்பதுதான்.
அப்படி இருக்கையில் இவர் செய்வது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் ஒன்றும் யோசிக்காமல் இதை செய்யவில்லை. ஏனென்றால் இவர் சின்ன கல்லை போட்டு பெரிய லாபத்தை அடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறார். ஏற்கனவே விக்ரம் 2 மற்றும் இந்தியன் 2 படத்தினால் இவருடைய பிசினஸ் எங்கேயோ போய்விட்டது. இதுவரை பார்க்காத லாபத்தை விக்ரம் 2 கொடுத்திருக்கிறது.
அந்த ஒரு நம்பிக்கையில் எப்படியும் இந்த படமும் நல்ல வியாபாரம் அடையும் என்று கமல் ராஜதந்திரமாக செயல்படுகிறார். அத்துடன் இவர் என்ன சொன்னாலும் அது போலவே செய்யும் ஒரு இயக்குனர் இவருக்கு கிடைத்ததால் இவருக்கு ஏற்ற மாதிரி பிளான்களை மாற்றி லாபத்தை பார்க்க காய் நகர்த்துகிறார்.
இவர் செய்வது எப்படி இருக்குது என்றால் படத்தை தயாரிப்பதில் அதிக செலவையும் ஏற்படுத்தாமல் அதே நேரத்தில் படத்தை நடித்து முடித்து ரிலீஸ் செய்யும் போது அதில் பெருத்த லாபத்தையும் பார்க்க வேண்டும் என்று தந்திரமாக திட்டத்தை தீட்டி உள்ளார். இந்த அளவுக்கு சிந்தித்து செயல்படுவதனால் தான் உலக நாயகனாக வலம் வருகிறார்.