நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து தளபதி காதல், காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் என குடும்ப பின்னணி நிறைந்த கதையில் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீசாக இருக்கிறது.
மாஸ்டர் பட ஹிட்டை தொடர்ந்து நடிகர் விஜய் ஒப்பந்தமான திரைப்படம் வாரிசு. விஜய்க்கு அடுத்தடுத்து கதையுடன் இயக்குனர்கள் காத்து கிடக்கின்றனர். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜயிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக கூறினார். மேலும் மங்காத்தா பட இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்க்காக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பேட்டி கொடுத்தார்.
ஆனால் விஜய் வாரிசு படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த மாஸ்டர் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. லோகேஷும் மாஸ்டருக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் விக்ரம் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.
இதனாலேயே இப்போது தளபதி 67 படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு வந்து இருக்கிறது. லோகேஷ் கனகராஜும் இந்த படத்திற்கான எல்லா வேலைகளையும் முடித்து விட்டார். இப்போது நடிகர் விஜய் வாரிசு பட சூட்டிங்கை முடித்து விட்டு வருவதற்காக மட்டுமே லோகேஷ் காத்து கொண்டிருக்கிறார்.
பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் இயக்குனர் பட சூட்டிங்கிற்காக மூன்று இடங்களை தேர்வு செய்து இருக்கிறார். அதன்படி தளபதி 67 மூணார், கோவா மற்றும் அரக்கு வேலியில் படப்பிடிப்புகள் நடக்கும். வாரிசு படத்தில் இன்னும் பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் தான் மீதம் இருக்கிறது.
வாரிசு பட சூட்டிங் முடிந்தவுடன் விஜய் குடும்பத்துடன் லண்டனுக்கு செல்கிறார். இரண்டு வார பிரேக்கிற்கு பிறகு விஜய் தளபதி 67 சூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரித்விராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளனர்.