ஜானுவை தேடி போகும் ராம், 96 படத்தின் பார்ட் 2 ரெடி.. அட! இப்படி ஒரு கதைக்களமா!

Vijay Sethupathi: கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசான 96 படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் இரண்டாம் பாகம் வரப்போகிறது என்றதுமே ரசிகர்களிடையே பெரிய ஆர்வம் தொற்றிக் கொண்டது. இதற்கு காரணம் ராமை சந்தித்து விட்டு ஜானு வெளிநாட்டிற்கு செல்வதோடு முதல் பாகம் முடிந்திருக்கும்.

அப்படி இருக்கும் பொழுது இரண்டாம் பாகத்தில் எந்த மாதிரியான கதைக்களம் இருக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

அட! இப்படி ஒரு கதைக்களமா!

திருமணமான பெண் தன்னுடைய முன்னாள் காதலனை சந்திப்பதுதான் முதல் பாகம். இதனால் இந்த கதையை பொறுத்த வரைக்கும் கத்தி மேல் நடக்கும் நிலைமைதான்.

கொஞ்சம் சருக்கினாலும் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கும். இந்த நிலையில் தான் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

மெய்யழகன் முடித்த கையோடு இந்த படத்திற்கான வேலையை தொடங்கி இருக்கிறார். மேலும் ராம் ஜானு கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இந்த படத்தில் இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேருமே இரண்டாம் பாகத்தில் இருப்பார்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.

மேலும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் இந்த கதைக்களம் ராம் வெளிநாட்டிற்கு சென்ற ஜானுவை தேடிச் செல்வது போல் அமைந்திருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் கதையை கேட்டு விட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 5 பவுன் தங்கச் செயினை பிரேம்குமாருக்கு பரிசளித்திருக்கிறார். தயாரிப்பாளரை இந்த அளவுக்கு கவர்ந்த கதைக்களம் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment