சகட்டு மேனிக்கு வேலையை பார்த்து வைத்திருக்கும் ஷங்கர்.. கில்லாடித்தனமாக எடுத்த முடிவு

Director Shankar: பிரம்மாண்டத்திற்கு பெயர் போன சங்கர் தன்னுடைய படங்களில் புதுவிதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கெட்டிக்காரர். அதிலும் இப்போது இந்தியன் 2 படத்தில் கமலை இளம் வயதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு டெக்னாலஜியை பயன்படுத்துவதற்காக சென்றிருக்கிறார்.

இதற்காக மட்டும் பல கோடியை வாரி இறைத்திருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்தப் படத்தை ஷங்கர் சகட்டுமேனிக்குஎடுத்து வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் சினிமாவில் பிலிம் ரோல்கள் தான். இது இப்பொழுது நவீன வடிவமாய் டிஜிட்டல் முறையில் வந்தது.

இப்பொழுது சகட்டு மேனிக்கு படங்களை எடுத்து தள்ளுகின்றனர். இப்படி சங்கர் இந்தியன் 2 படத்தை 6 மணி நேரம் எடுத்திருக்கிறார். இனி இது எடிட்டர் ஓட வேலை தான் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் 2:45 மணி நேரமாக அவர் கட் செய்ய வேண்டும்.

இரண்டரை மணி நேரம் படத்திற்கு 13 ஆயிரம் அடிகள் தேவைப்படுமாம். ஆனால் சங்கர் கிட்டத்தட்ட 2 லட்சம் அடிகள் எடுத்து வைத்திருக்கிறாராம். எடிட் பண்ணிய பிறகும் அது ஆறு மணி நேரம் படமாக வந்துள்ளதாம். இதனால் எடிட்டருக்கு தான்இப்போது தலைவலி ஆரம்பித்துவிட்டது.

அத்துடன் இந்த படத்தை எடுப்பதற்காக நிறைய செலவாகி இருக்கிறது. இதனால் எடுத்த காட்சிகளை எல்லாம் கட் செய்து வீணாக்காமல் ஷங்கர் கில்லாடியாக அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது சங்கரும், கமலும் சேர்ந்து இந்த படம் அடுத்த பார்ட்டாகவும் எடுக்கலாமா என்று யோசித்து வருகின்றன.

இதைப்பற்றி தயாரிப்பாளர்களான உதயநிதி மற்றும் லைக்கா நிறுவனத்துடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் படம் வெளியாகி 27 வருடம் கழித்து தான் அதன் இரண்டாம் பாகம் வரும் பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கிறது. ஆனால் 3ம் பாகம் இவ்வளவு காலதாமதம் எடுக்காது, சில மாதங்களிலேயே அதை ரிலீஸ் செய்யவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.