டார்க் காமெடிக்கு விதை போட்ட படத்தின் இரண்டாம் பாகம் ரெடி.. நெல்சனுக்கு முன்னாடியே உருவான ஹெட் மாஸ்டர்

நெல்சன் திலீப் குமார் தனது ஐந்தாவது படமான ஜெய்லர் 2 வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இரண்டு வருடங்களாக படங்களை இயக்காமல் இந்த படத்திற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஜெய்லர்.

ஜெயிலர் படத்திற்கு பின் ஒரே ஒரு படத்தை தயாரிப்பு மட்டும் செய்துள்ளார் நெல்சன். அவர் நண்பர் கவினுக்காக, ப்ளடி பக்கர் படத்தை தயாரித்துள்ளார். லோகேஷ் கனகராஜன் கூலி படத்தை முடித்த பிறகு ரஜினி, இவருடன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளார்.

ஏற்கனவே தான் இயக்கிய 4 படங்களிலும் டார்க் காமெடி டிராக்களை பயன்படுத்தி வந்தார். கோலமாவு கோகிலா, பீஸ்ட், ஜெய்லர், டாக்டர் என இந்த படங்களில் இந்த வகை டார்க் காமெடிகளை பயன்படுத்தி வந்தார். மிகவும் சீரியஸாய் போய்க்கொண்டிருக்கும் கடையில் அவர்களுக்கு, தெரியாமலேயே காமெடியாய் நடப்பது தான் டார்க் காமெடி.

நெல்சன் திலிப் குமாருக்கு முன்பே தமிழ் சினிமாவில் இந்த வகை காமெடி கதையை முதலில் கொண்டு வந்தது இயக்குனர் நவீன். தன்னுடைய மூடர் கூடம் என்ற படத்தில் இந்த வகை காமெடிகள் இடம் பெற்றிருக்கும். இப்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகிவிட்டது, ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

2013ஆம் ஆண்டு மூடர்கூடம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இயக்குனர் நவீனும் முதன்மை கதாபாத்திரம் பண்ணியிருந்தார். அவரை தவிர சென்ராயன், ஓவியா போன்றவர்கள் நடித்திருந்தனர். இப்பொழுது இவர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.