விக்ரம் படத்தில் வரும் இந்த குழந்தை யார் தெரியுமா.? சஸ்பென்சை கண்டுபிடிச்சாச்சு!

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எப்போதும் படத்தின் டைட்டில் ஹீரோ அல்லது ஹீரோவை சம்பந்தப்பட்ட விஷயத்தை அடிப்படை கொண்டுதான் இருக்கும். இந்நிலையில் இப்படத்திற்கு விக்ரம் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதே விக்ரம் என்ற டைட்டிலுடன் 1986இல் கமலஹாசன் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரில் ஒரு சிறு குழந்தையின் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்தப் படத்தில் கமலின் குழந்தையாக தான் அந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தன் மனைவி இறந்த விஷயத்தை பற்றி கமல் பேசும்போது கண்ணீர்விடும் காட்சிகளும் அந்த குழந்தையிடம் தான்.

அதன் பிறகு கமல் அந்த குழந்தையை தனியாக வளர்த்து வருகிறார். ஆக்சன், அதிரடி சண்டைக்காட்சிகள் என இருக்கும் விக்ரம் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வளவு நாளாக கமலின் கதாபாத்திரத்தின் பெயர் தான் விக்ரம் என கருதப்பட்டது. ஆனால் இப்படத்தின் டிரைலரில் கமல் விக்ரம் என கத்துவார். இதைப் பார்க்கும்போது கமலின் பெயர் விக்ரம் இல்லை என்றும் கமலின் குழந்தை பெயர்தான் விக்ரம் என கூறப்படுகிறது.

அந்த குழந்தை வேறு யாருமில்லை காளிதாஸ் ஜெயராம் தான். ரகசியமாக வைத்திருந்த சூர்யாவின் கதாபாத்திரத்திதையே ட்ரெய்லரில் காண்பித்த லோகேஷ் கனகராஜ் காளிதாஸ் ஜெயராமனின் கதாபாத்திரத்தை சஸ்பென்சாக வைத்துள்ளார். ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் தான் படத்தின் கருவாக அமைந்துள்ளது.