வலிமைக்கு குறிச்ச தேதி, ஆனா இப்ப சிவகார்த்திகேயன் வராப்புல.. பிரபல OTTக்கு கைமாறிய டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பெரிதும் நம்பியிருந்த நிலையில் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில் தற்போது ஒரு வழியாக டாக்டர் படத்தின் பேச்சுவார்த்தைகள் முடிந்து ரிலீஸ் தேதியை கூட குறித்து விட்டதாம் அந்த ஓடிடி நிறுவனம்.

டாக்டர் படம் ஆரம்பிக்கும் போதே அந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு விற்றுவிட்டனர். எல்லாம் தியேட்டரில் வெளியிட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் தற்போதைய எதிர்பாராத சூழ்நிலையால் டாக்டர் படம் ஓடிடியில் வெளியிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசியபோது ஓடிடி உரிமையுடன் சேர்த்து சாட்டிலைட் உரிமையையும் தரவேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் சன் டிவியோ கொடுக்க மறுக்க, இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி இறுதியில் ஒருவழியாக சமாதானம் அடைந்துவிட்டனர்.

அந்தவகையில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி டாக்டர் படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாம். முன்னதாக இதே தேதியில்தான் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

doctor-direct-ott-release
doctor-direct-ott-release

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் இன்னும் சில மாதங்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும், இதனால் பெரிய வசூல் செய்ய வேண்டிய படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக பாதிப்பை சந்திக்கும் எனவும் புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரின் முடிவுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. டாக்டர் படத்தை விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.