சிறிய கல்லில் பெத்த லாபம் பார்க்கும் தியேட்டர் ஓனர்ஸ்.. கில்லி முதல் பில்லா வரை ரீ ரிலீஸாக காரணம்

Ghilli – Billa : சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை அதிகம் ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். இதற்கு காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகிறது. அதாவது ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற நடிகர்களின் பழைய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகிறது. அதுவும் இந்த மாதம் விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா போன்ற படங்கள் ரிலீஸாகி இருக்கிறது.

இதுபோல் தொடர்ந்து நிறைய படங்கள் ரீ ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும் பழைய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு காரணம் புதிய படங்கள் ஒரு வாரத்திற்கு தான் தியேட்டரில் வெளியாகிறது. அதுவும் படத்தின் கதை ரசிகர்கள் பிடிக்கவில்லை.

எல்லா படத்தை எடுத்துக் கொண்டாலும் ஒரே கதையை உருட்டுவது போல் தான் இருக்கிறது. ஆனால் பழைய படங்கள் நன்றாக இருக்கிறது. அதுவும் அப்போதெல்லாம் இயக்குனர்கள் தயாரிப்பாளர் இடம் சென்று கதையை கூறி சம்மதம் வாங்க வேண்டும்.

Also Read : அரசியலில் முதல் தகுதியிலேயே அவுட் ஆன விஜய்.. சூழ்ச்சி தெரியாமல் சிக்கும் தளபதி

மேலும் பழைய படத்தில் கதை மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கும். அதனால் தான் மக்கள் இப்போதும் நன்றாக இந்த படத்தை பார்த்து கொண்டாடுகிறார்கள். ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களின் டிக்கெட் விலை 50 ரூபாய் மட்டும்தான். கூட்டம் வருவதால் தியேட்டர் ஓனர்களுக்கும்ன நல்ல லாபம் கிடைக்கிறது.

இதனால் தொடர்ந்து நிறைய படங்கள் ரீலீஸ் செய்யப்படுவதாக திருப்பூர் சுப்ரமணியன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதோடு இப்போது வரும் படங்களில் கதையை காட்டிலும் ஹீரோக்களின் பில்டப் தான் அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : விஜய்க்கு நிகராக அஜித் கேட்ட சம்பளம், தெறித்து ஓடிய 4 தயாரிப்பாளர்கள்.. துணிவுடன் டாடா காட்டிய போனி கபூர்