மனைவி சொல்லே மந்திரம் என நடித்து வரும் ஜென்டில்மேன்.. யாரு சாமி நீ? த்ரிஷாவாக இருந்தாலும் முத்தக்காட்சி இல்லையாம்

Actress Trisha: கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக முன்னணி ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு, அத்துடன் சினிமா பிரபலங்கள் பலரையும் கவரும் வகையில் எப்பொழுதும் ஜொலிக்கும் தோற்றத்துடனே இருக்கக்கூடியவர்.

அதிலும் முன்னாடியே விட தற்போது ஒவ்வொரு படத்திற்கும் இவருடைய அழகு கூடிக்கொண்டே வருகிறது. அப்படிப்பட்ட இவரிடம் நடிப்பதற்கு பல ஹீரோக்கள் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் த்ரிஷா என்றால் கண்டிப்பாக ரொமான்ஸ் சீன் நன்றாகவே இருக்கும்.

அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு ஹைலைட்டாக அமையும் என்று பலரும் யோசிப்பார்கள். அப்படிப்பட்ட இவரிடம் ஒரு ஜென்டில்மேன் முத்த காட்சிகளை வேண்டாம் என்று ரொமான்ஸ்க்கு நோ சொல்லியிருக்கிறார். இவரோடு மட்டுமில்லாமல் பொதுவாகவே ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியை வேண்டாம் என்று அறவே தவிர்க்க சொல்லி வருகிறார்.

அதற்கு முக்கிய காரணம் இவர் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தால் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். அவருக்காகவே தற்போது எந்த படங்களிலும் ரொமான்ஸ் பண்ணுவதில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று பல படங்களில் அதற்கேற்ற மாதிரி நடித்து வருகிறார். அந்த ஜென்டில்மேன் வேறு யாருமில்லை நடிகர் அஜித். இவர் ஆரம்பத்தில் காதல் மன்னனாக வந்தவர்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றிக் கொண்டு வருகிறார். அதில் முக்கியமான விஷயம் நடிகை கூட எந்தவித ரொமான்ஸ் பண்ணாமல் டீசன்டாக வந்து நடிப்பது தான். அது இவர் நடித்து வரும் அனைத்து படங்களிலும் நன்றாகவே தெரிகிறது. அப்படித்தான் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுடன் அஜித் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது போல் கௌதம் மேனன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் அதற்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனையே இந்த மாதிரி எல்லாம் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அஜித்துக்கு ஏற்ற மாதிரி அந்த படத்தில் வரும் பாடல்களில் கண்கள் மற்றும் உடல் அசைவுகள் மூலமே ரொமான்ஸ் வைத்திருப்பார். இப்படி அஜித் பெயருக்காக மட்டுமே படத்தில் ஹீரோயின்களை பயன்படுத்தி வருகிறார்.