சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ளது சமீபத்தில் இந்த படத்தின் அனௌன்ஸ் மென்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் இப்படத்திற்கான கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்ற வந்ததையடுத்து தற்போது அவர்கள் யார் யார் என்ற பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்துக்கு ஜோடியாக உலக அழகியும், இந்தியாவின் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தேர்வாகி உள்ளார். இவர் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் திரைப்படத்தில் ரஜினிகாந்தோடு ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த நிலையில் மீண்டும் தலைவர் 169 திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ஜோடி சேருகிறார்.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா மோகன் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க உள்ளார். டாக்டர் திரைப்படத்திற்குப் பின்னர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன், தற்போது இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.
பொதுவாகவே அறிமுகமான கதாநாயகிகள் திரைக்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் .முக்கியமாக நடிகர் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோரருடன் நடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கு சில வருடங்களாவது ஆகும். ஆனால் இதற்கெல்லாம் மாறுபடும் விதமாக நடிகை பிரியங்கா மோகன் உள்ளார்.
தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களில் ரிலீசாகி வெற்றி பெற்ற நிலையில் தன்னுடைய மூன்றாவது படத்தின் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரோடு நடிக்கும் வாய்ப்பை பிரியங்கா மோகன் பெற்றுள்ளார். இதன் மூலமாகவே அவரது வளர்ச்சியை நம்மால் காண முடிகிறது. அடுத்ததாக இப்படத்தில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் இணைந்துள்ளார்.
தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராகவும், அதிகம் சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் இருக்கும் நடிகராகவும் உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் ரஜினியின் குரலில் மிமிக்ரி செய்து அசத்துவார். இப்படிதான் ஒரு விருது வழங்கும் விழா மேடையில் ரஜினி பக்கத்திலேயே சிவகார்த்திகேயன் நின்று ரஜினி குரலில் பேசி ரஜினியையே ஆச்சரியப்பட வைத்திருப்பார்.
இந்த நிகழ்வை பார்த்த அந்த அரங்கமே கரகோஷங்த்தில் அதிர்ந்தது. அப்படிப்பட்ட தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் தற்போது ரஜினியின் திரைப்படத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நான் தலைவரோடு நடிக்கிறேன் என்று தனது நண்பனான இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் அடம்பிடித்து தலைவர் 169 திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
ஹீரோவான பிறகு ரஜினியின் திரைபடத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனுக்கு ஜோடியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.மேலும் இவரின் டாக்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளிவந்து ஹிட் கொடுத்த நிலையில் இவரது ரசிகர்கள் டான் திரைப்படத்தின் அப்டேட்களை கேட்டு வருகின்றனர்.
இயக்குனர் சிவா இயக்கத்திலா நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது தலைவர் 169 திரைப்படத்தின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் கதாபாத்திரங்களின் அப்டேட்களை கேட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.