Chinmayi : பிரபல பின்னணி பாடகியான சின்மயி ஏகப்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில ஆண்டுகளுக்குச் சின்மயி சினிமாவில் பாடல் பாடக்கூடாது, டப்பிங் பேசக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த தடையையும் மீறி லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் சின்மயை பாட வைத்திருந்தார். இதனால் பல சர்ச்சைகளையும் சந்தித்தனர். அதன் பிறகு சமீபத்தில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தீ கலந்து கொள்ளாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சின்மயி முத்தமழை பாடலை பாடியிருந்தார்.
இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. அதோடு ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தக் லைஃப் ஆல்பத்தில் சின்மயி வெர்ஷனையும் சேர்த்தனர். இப்போது சின்மைக்கு வாய்ப்பு கொடுப்பதாக இசையமைப்பாளர் கூறியிருக்கிறார்.
சின்மயிக்கு வாய்ப்பு கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர்
அதாவது இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் தான் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் மார்கன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஜூன் 27 வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய விஜய் ஆண்டனி நான் விரைவில் படங்களை இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாக சின்மயை பாட வைப்பேன் என்று கூறியிருக்கிறார். அதோடு ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை வருடங்களாக சின்மயி குரலில் பாடல்கள் வரவில்லையே என ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தனர். இப்போது முத்த மழை பாடலால் அவரை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். விஜய் ஆண்டனி போல் மாற்ற இசையமைப்பாளர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது.