சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கடைசியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான வாத்தி படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் கேப்டன் மில்லர் படம் ஹிஸ்டாரிக்கல் படமாக எடுக்கப்படுகிறது. அதாவது சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய கதை அம்சத்தை கொண்ட படமாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பில் ஓவர் அலப்பறையை கூட்டி வருகிறாராம் தனுஷ்.
அதாவது கேப்டன் மில்லர் படத்தில் இரட்டை வேடங்கள் என்பதால் நிறைய நாள் கால்ஷீட் தேவைப்பட்டுள்ளது. ஆகையால் தனுஷ் குளோசப் ஷார்ட்டில் மட்டும் நடிப்பாராம், மீத எல்லா காட்சிகளையும் டூப் வைத்து எடுத்து வருகிறார்களாம். அப்படி எடுத்தால் அது எந்த அளவுக்கு பொருந்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுவாக சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் தான் டூப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது தனுஷ் பண்ணும் அலப்பறையால் படக்குழு செய்வதறியாமல் முழித்து வருகிறார்களாம். இப்படி எடுத்தால் படத்தில் 80 சதவீத காட்சிகளில் தனுசே இருக்க மாட்டார் என்று இயக்குனர் புலம்பி வருகிறாராம்.
உலகநாயகன் கமல்ஹாசன், விக்ரம் போன்ற நடிகர்கள் எவ்வளவு சிரமமான காட்சியாக இருந்தாலும் தானே நடிக்க மெனக்கெட்ட சில விஷயங்களை செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த வயதிலும் இந்தியன் 2 படத்திற்காக கமல் கடுமையாக உழைத்து வருகிறாராம்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாண்டி மேக்கப்புக்கு மட்டுமே செலவு செய்து வருகிறார். இதுவே ஒரு நல்ல நடிகர் என்பதை படைச்சாற்றுகிறது. எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் முடிந்தவரை டூப் இல்லாமலே கமல் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை உலகநாயகனிடம் இருந்து தனுஷ் கத்துக்கோங்க என்ன ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.