தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பை கிளப்பிய 2வது ஹிட் கொடுக்க போகும் 5 இயக்குனர்கள்.. அண்ணனுக்கு போட்டியாக வருவாரா தனுஷ்

ஒரு சில இயக்குனர்கள் தங்களின் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி அடைவதோடு ரசிகர்களுக்கு அவர்கள் மீது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி விடுவார்கள். ரசிகர்களும் இவர்கள் அடுத்த படம் எப்போது எடுப்பார்கள் என்று பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் கொடுத்த எதிர்பார்ப்பினால், தற்போது எப்போது இவர்கள் அடுத்த படம் எடுப்பார்கள் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.

தனுஷ்: நடிகர் தனுஷ் ஹீரோவாகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டார். அவர் பவர் பாண்டி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். மாஸ், கிளாஸ் என எதுவும் காட்டாமல் எதார்த்தமான ஒரு கதை களத்தில் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து இவர் எடுத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. தற்போது இவர் அடுத்த படம் இயக்குவாரா என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இவர் இயக்கத்திலும் குதித்தால் செல்வராகவனுக்கும் இவருக்கும் கண்டிப்பாக கடும் போட்டியாக இருக்கும்.

பிரதீப் ரங்கநாதன்: இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராக கோலிவுட் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார். அதன்பின்னர் இவர் இயக்கி, நடித்த லவ் டுடே திரைப்படம் ஒட்டு மொத்த இளைஞர்களும் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது இவரின் அடுத்த படம் எப்போது வரும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிங்கு பெரியசாமி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் அறிந்திடாத ஒரு கதைக்களம் என்றுதான் சொல்ல வேண்டும். நவீன உலகத்தில் நடக்கும் திருட்டு செயல்களை டெக்னாலஜியின் உதவியுடன் கணக்கச்சிதமாக சொல்லி இருந்தார் தேசிங்கு பெரியசாமி. தற்போது இவர் சிம்புவை வைத்து இயக்க இருக்கும் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக ஆகியிருக்கிறது.

பிரேம்குமார்: தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு நல்ல காதல் கதையோடு வந்த திரைப்படம் தான் 96. திரிஷா மற்றும் விஜய் சேதுபதியாக இருக்கட்டும், அல்லது இவர்கள் இருவருது கேரக்டரில் பள்ளி பருவத்தில் நடித்த கௌரி மற்றும் ஆதித்யாவாக இருக்கட்டும் தங்கள் சிறந்த நடிப்பினால் படம் பார்ப்பவர்களை காதலில் திளைக்க வைத்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இயக்குனர் பிரேம் அடுத்து எந்த படத்தை இயக்கப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு ஆவலாக இருக்கிறது.

இளன்: மகிழ்ச்சியற்ற திருமணங்களை விட மகிழ்ச்சியான உறவுகளே சிறந்தது என்ற கதை அம்சத்தை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றது போல் காட்சிகளை அமைத்து இயக்குர் இளன் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பியார் பிரேமா காதல். லிவிங் ரிலேஷன்ஷிப்பை நியாயமாக காட்டியிருந்தாலும் இந்த படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. தற்போது இளனின் அடுத்த திரைப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.