பிப்ரவரி 9 ஓடிடியில் ரிலீஸாகும் 14 படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்

February 9th OTT Release Movies : இந்த வாரம் தியேட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாகிறது. அதே போல் ஓடிடியிலும் பெரிய நடிகர்களின் படங்கள் பஞ்சமில்லாமல் வெளியாக உள்ளது. அந்த வகையில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் அயலான் படம் வெளியாகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடிக்கு வந்துள்ளது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படமும் இதே நாளில் அமேசான் பிரைமில் வெளியாகிறது. ஏற்கனவே அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் பொங்கலுக்கு மோதிக்கொண்டிருந்தது.

இப்போது ஓடிடியில் மீண்டும் மோதிக் கொள்கின்றனர். அடுத்ததாக ஆஹா ஓடிடி தளத்தில் இப்படிக்கு காதல் என்ற படம் வெளியாகிறது. தெலுங்கில் சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. மேலும் ஆஹா ஓடிடி தளத்தில் பப்பில்கம் படம் வெளியாகிறது.

பாலிவுட்டில் பாக்ஸ்ஷாக் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. ஜீ 5 ஓடிடி தளத்தில் லந்தராணி மற்றும் கிச்சடி 2 படம் வெளியாகிறது. ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆர்யா s3 பகுதி இரண்டு சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் பெங்காலி மொழியில் அய்னாபாஜி என்ற தொடர் வெளியாகிறது.

மராட்டிய மொழியில் ஜெய் மகேந்திரன் என்ற தொடர் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கு அடுத்தபடியாக கொரியன் மொழியில் கில்லர் பரடக்ஸ் தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்த வாரம் ஓடிடியில் செம விருந்து உள்ளது.