அபராதம் கட்டிய தக் லைஃப் படக்குழு.. காலியாகும் கமலின் கஜானா

Kamal : பொதுவாகவே தயாரிப்பாளருக்கு ஒரு படம் தூக்கிவிட்டால் ஒரு படம் சரிவை கொடுக்கும். அப்படிதான் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விக்ரம் மற்றும் அமரன் ஆகிய படங்கள் நல்ல லாபத்தை கொடுத்தது. ஆனால் அந்த லாபம் மொத்தமாக போகும்படி தான் தக் லைஃப் படம் வசூலை பெற்றது.

கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை கூட நெருங்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் இந்த படத்தால் கமலுக்கு அடுத்தடுத்து பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒருபுறம் இந்த படம் கர்நாடகாவில் வெளியாகாததால் பல கோடி நஷ்டத்தை சந்தித்தது.

மேலும் நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்கி இருந்தது. பொதுவாகவே ஒரு படம் வெளியாகி நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். ஆனால் தக் லைஃப் தியேட்டரில் போகாததால் மிக விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

தக் லைஃப் படக்குழு கட்டிய அபராதம்

இதனால் போட்ட அக்ரீமெண்டில் இருந்த சில தொகையை குறைக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவெடுத்தது. இதுபோக இப்போது சீக்கிரமாக ஓடிடியில் வெளியாகுவதால் மல்டிபிளக்ஸ் கவுன்சிலில் 25 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளது.

அதாவது ஓடிடி ஒப்பந்தத்தை மீறப்பட்டுள்ளதால் இந்த அபராதம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கமலின் கஜானா காலியாகும்படி தக் லைஃப் படம் மோசமான அனுபவத்தை கொடுத்தது. ஆனாலும் கமல் தன்னுடைய அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

அதன்படி சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் லோகேஷின் விக்ரம் 2 படம் கமலின் லயன் அப்பில் தான் இருக்கிறது.