முதல்முறையாக தமிழில் ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கிய எம்ஜிஆர் படம்.. சென்சார் போர்ட் கூறிய காரணம்

MGR: இந்த காலத்துல வர்ற படம் எல்லாம் யார் பாக்க முடியும். எங்க காலத்துல எப்படிப்பட்ட படம் எல்லாம் வந்தது தெரியுமா என சொல்வதற்கு ஊருக்கு நாலு பேர் இருக்காங்க. இப்படி காலம் காலமா பேசிகிட்டு இருந்தவங்கள திருப்பி கேள்வி கேட்கும் அளவுக்கு அந்த காலத்து படங்களை, பாட்டுக்களை ட்ரோல் செய்ய நெட்டிசன்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதில் தான் முக்கியமான ஒரு படமும் சிக்கி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஏ சர்டிபிகேட் வாங்கிய படம் தான் அது. இந்த காலத்தில் ஏ சர்டிபிகேட் படம் என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. ஆனால் கிட்டத்தட்ட 70 வருடத்திற்கு முன்னால் ஒரு படம் ஏ சர்டிபிகேட் வாங்கி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

இந்த படத்தை குழந்தைகள் தியேட்டரில் போய் பார்க்க கூடாது என முதன் முதலில் தமிழகத்தில் சொன்ன போது அந்த மக்களின் உணர்வு எப்படி இருந்திருக்கும். ஏ சர்டிபிகேட் என்றால் என்ன என்று கூட பலருக்கு புரிந்திருக்காது.

சென்சார் போர்ட் கூறிய காரணம்

இந்த படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் நடித்திருக்கிறார். 1951 ஆம் ஆண்டு அஞ்சலிதேவியுடன் எம்ஜிஆர் இணைந்து நடித்த படம் தான் மர்மயோகி. ராஜகுமாரி படம் வெற்றி அடைந்த பிறகு எம்ஜிஆருக்கு தன்னை மையப்படுத்திய ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.

இதற்காக இயக்குனர் ராம்நாத் என்பவரை எம்ஜிஆர் அணுகிய போது தான் இந்த படத்தின் கதை கிடைத்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் எழுதிய மகத் என்னும் கதையின் தழுவலாக எடுக்கப்பட்டது தான் இந்த மர்மயோகி.

ஒரு இளவரசி அடுத்து அரியணை ஏற வேண்டும் என்ற ஆசையில் தனக்கு எதிராக இருக்கும் அத்தனை பேரையும் கொலை செய்து விடுகிறாள். பின்னர் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறாள். இதற்கு எதிராக கதாநாயகன் களம் இறங்கி எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுகிறான்.

என்பதுதான் கதை இதில் இளவரசியை பயமுறுத்த அடிக்கடி பேய் உருவம் ஒன்று வரும். அதே போன்று இளவரசி ஆட்சிக்காக தன்னை கொள்ள நினைக்கும் போது எம்ஜிஆர் சில மந்திரங்களை செய்து அதன் மூலம் தப்பிப்பார்.

இதற்காகத்தான் அந்த காலகட்டத்தில் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இதன் பின்னர் அதே மாதிரி தணிக்கை குழுவால் ஏ சர்டிபிகேட் வாங்கிய படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கவரிமான்.