லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சரித்திர படமாக அமைந்தது. இந்த மாதிரி வெற்றியை கமல் எந்த படங்களிலுமே பார்த்ததே இல்லை அந்த அளவிற்கு மாபெரும் வெற்றி படமாக இவருக்கு கை கொடுத்தது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வி படமாக தான் இருந்தது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் மூலம் இவருடைய வளர்ச்சி மிகவும் எட்டாத தூரத்திற்கு சென்று விட்டது என்று சொல்லலாம். இந்த வெற்றியை ருசித்த இவர் மறுபடியும் அடுத்தடுத்த படங்கள் மூலம் எப்படியாவது நல்ல படங்களை கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்று புது உத்வேகமாக வேலை பார்த்து வருகிறார்.
அதே மாதிரி இவருடைய வருகைக்காக பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இவரிடம் இயக்குனர்கள் கதையை கூறி வருகிறார்கள். ஆனாலும் கமல் மனதுக்குள் ஒரு பெரிய கணக்கை போட்டுக் கொண்டு சில இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்.
தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 படம் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் முதல் பாகம் பெரிய சூப்பர் ஹிட் படமாக ஆனதை அடுத்து இந்தப் படமும் இவருக்கு பேசும் படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தப் படத்தை நடித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வில் இருக்கப் போவதாக தகவல் வெளிவந்தது.
இதற்கிடையில் இவருடைய அடுத்தடுத்த படங்களை யார் எடுக்கப் போகிறார் என்பதை முடிவு செய்து இருக்கிறார். முதலில் எச் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கப் போகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் அவருக்கு விலை மதிப்பு மிக்க ஒரு காரை பரிசாக அளித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பும் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட போகிறது.
அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் KH234 நடிக்கப் போகிறார். இவர் படம் என்றாலே மிகப் பிரமாண்டமாக தான் இருக்கும். அதன் பின் பெரிய வெற்றியை கொடுத்த லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் பார்ட் 2, அடுத்ததாக பா ரஞ்சித் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக நடிக்கிறார்.