Simbu: சிம்புவின் மார்க்கெட்டை மாநாடு படத்திற்கு முன், பின் என்றே பிரித்துக் கொள்ளலாம். ஏனென்றால் மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு பல வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்து வந்தார். இதனால் சினிமாவில் அவர் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்று விமர்சனங்கள் வந்தது.
ஆனால் தனது உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் மாஸ் ஹிட் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிதான். இப்போது சிம்புவின் கைவசம் ஐந்து படங்கள் இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் தக் லைஃப் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகின்ற ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. சிம்புவுக்கு இந்த படத்தில் மிகப்பெரிய ஸ்கோப் இருக்கிறது. படத்தின் டிரைலரிலேயே சிம்பு மாஸ் காட்டி இருந்தார்.
சிம்பு லைன் அப்பில் உள்ள ஐந்து படங்கள்
அடுத்ததாக எஸ்டிஆர் 49 படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருக்கிறார். டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர் சிம்புக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை ஆகாஷ் பிரபாகரன் தயாரிக்கிறார். சந்தானம் நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்புக்காக காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிம்புவின் 50 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்காமல் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு நடிக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் மணிரத்னத்துடன் சிம்பு இணைய இருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இவ்வாறு சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.