தக் லைஃப் ஏமாற்றம்.. 2025ல் பெரிய நம்பிக்கை தரும் 5 படங்கள்!

Kamal : இந்த வருடம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் சில படங்கள் மட்டுமே வெற்றி மகுடத்தை சூடியது. குட் பேட் அக்லி, டிராகன், மதகஜ ராஜா, டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் மாமன் போன்ற படங்கள் லிஸ்டில் இருக்கிறது.

பெரிதும் எதிர்பார்த்த விடாமுயற்சி, தக் லைஃப் போன்ற படங்கள் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் அடுத்த ஆறு மாதங்களில் நம்பிக்கை தரும் ஐந்து படங்களை பார்க்கலாம். தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் தான் இட்லிகடை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

இட்லிகடை படம் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிறது பைசன் படம். இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கிறது லைக் படம்.

2025 இல் வெளியாக இருக்கும் ஐந்து படங்கள்

இப்படம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. அமரன் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கிறது மதராசி படம். ஏஆர் முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாக இருக்கும் படம் தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் நாகார்ஜுனா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. பெரிய நம்பிக்கையில் வெளியாகும் இந்த படங்கள் எவ்வாறு வரவேற்பு பெறுகிறது, வசூல் பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.