சமீபத்தில் கன்னட மொழியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் தான் காந்தாரா. ரிஷப் செட்டி இயக்கி நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து தற்போது பல நடிகர்களும் மிரண்டு போயிருக்கின்றனர். அதிலும் இறுதி காட்சியில் வரும் அந்த காந்தாரா பூத கோலா நடனம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த நடனத்தை பார்த்து மெய் சிலிர்த்து போயிருக்கிறார். எப்போதுமே திறமையானவர்களையும், திறமையான படத்தையும் முதல் ஆளாக பாராட்டும் ரஜினி உடனே ரிஷப் செட்டியை நேரில் அழைத்து தன் பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் தங்க செயின் ஒன்றையும் அவருக்கு பரிசளித்தார். இந்நிலையில் தற்போது தமிழ் ரசிகர்கள் கோலிவுட் நடிகர்களும் இந்த நடனத்தை கற்றுக் கொண்டு படத்தில் ஆட வேண்டும் என்று ரொம்பவும் எதிர்பார்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான நடனங்களையும் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இந்த காந்தாரா ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசை.
அதனால் அப்படி ஒரு திரைப்படம் வரவேண்டும் என்றும் இந்த ஆட்டத்தை ஆடுவதற்கு சரியான நபர் கமல்ஹாசன் தான் என்றும் ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர். ஏனென்றால் கமல்ஹாசன் எந்த அளவுக்கு டான்ஸ் ஆடுவார் என்று அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் புதுப்புது நடனங்களை அறிமுகப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
அந்த வகையில் பரதநாட்டியம், கதக் போன்ற பல நடனங்களையும் அவர் ஆடி அசத்தியிருக்கிறார். அதிலும் அவர் நடிப்பில் வெளிவந்த உத்தம வில்லன் திரைப்படத்தில் வரும் இரணிய நாடக காட்சியில் அவர் ஆடிய நடனம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படி அவருடைய நடன திறமைக்கு எடுத்துக்காட்டாக பல திரைப்படங்களை சொல்லலாம்.
அந்த வகையில் சகலகலா வல்லவனாக இருக்கும் கமல்ஹாசனால் மட்டுமே இந்த நடனத்தை ஆட முடியும். அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கிறது. அது மட்டும் நடந்து விட்டால் நம் தமிழ் சினிமாவுக்கு அதுதான் மிகப் பெரும் பெருமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.