Actor Vijay: வரும் ஆயுத பூஜைக்கு விஜய்யின் லியோ படத்தை ரிலீஸ் செய்வதற்காக அந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், மன்சூர் அலிகான் போன்ற பல முன்னணி பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் விஜய்யின் ஓவர் நெருக்கம், அவருக்கு ஆபத்தாக முடிந்து விடாமல் இருந்தால் சரி தான். அந்த அளவிற்கு பேசிப் பேசியே பழைய குட்டையை தோண்டுகிறார் கௌதம் மேனன். லியோ படத்தில் விஜய் உடன் இயக்குனர் கௌதம் மேனன் நிறைய காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறார்.
அப்போது சூட்டிங் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வார்களாம். இப்பொழுது பழைய மனக்கசப்புகளை எல்லாம் இருவரும் மறந்து விட்டனர். விஜய்யோட குட் பர்சன் லிஸ்டில் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் வந்து விட்டார்.
இப்பொழுது தான் விஜய்க்கு ஆபத்து வந்தது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மூடிய பழைய குட்டை ஒன்றை பற்றியும் பேசி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய வேண்டியதாக இருந்த படம் “யோகன் அத்தியாயம் ஒன்று”.
2013ம் ஆண்டு கெளதம் மேனன் திரைக்கதை எழுதி தயாரித்து இயக்க முடிவு செய்து, யோகன் அத்தியாயம் ஒன்று படத்தின் அறிவிப்பும் வெளியானது. படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் கடைசியில் படப்பிடிப்பு திடீரென்று ட்ராப் ஆனது. காரணம் இந்த படப்பிடிப்பின் போது கௌதம் மேனன் மற்றும் விஜய் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தளபதி படத்திலிருந்து விலகி விட்டாராம்.
இந்த படத்தை நீண்ட வருடத்திற்கு பிறகு மீண்டும் எடுக்கும் ஆசை கௌதம் மேனனுக்கு வந்துவிட்டது. அதைப் பற்றி இப்பொழுது டிஸ்கஷனில் இருக்கிறார். ஆனால் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் கமிட்டாகி இருக்கும் விஜய், அடுத்ததாக கௌதம் மேனன் உடன் இணைய போவதாக பேச்சு அடிபடுகிறது.