Director Gautham Vasudev Menon: விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இவ்வளவு தரம் கெட்டு போயிட்டாரே! என்று ஆதங்கப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கு. கௌதம் மேனன் தனது சொந்த தயாரிப்பில் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்திற்கு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி ப்ரோமோட் செய்திருப்பதை வைத்து திரை விமர்சகர் பிஸ்மி கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார். கௌதம் மேனனுக்கு ஹாலிவுட் படம் எடுக்கிற நெனப்பு போல, இவர் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் ப்ரோமோஷன் செய்வதற்காக ஒரு சில வார்த்தைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் முதல் வரியில் கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். கெட்ட வார்த்தையில் ப்ரோமோஷன் செஞ்சா மட்டும் படம் ஓடிடுமா! என்று, கௌதம் மேனனை வெளுத்து வாங்கி இருக்கிறார் பிஸ்மி. ‘பத்து நாட்கள் மிஷன் ஆன்’ எனக் குறிப்பிட்டு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி ப்ரோமோஷன் செய்துள்ளது.
ஹாலிவுட் இயக்குனர் என்று நினைப்பா!
கௌதம் மேனன் பதிவிட்ட அதே பதிவில் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிக்கும் ஜான் கேரக்டர் மற்றும் அவருடன் கூட்டு சேரும் 10 பேர் உடைய அணி CSK-யை குறிப்பிட்டு மானத்தை வாங்கி விட்டார். இதனால் தற்போது துருவ நட்சத்திரம் படத்திற்கு எதிராக நாலாபுறமும் எதிர்ப்பு கிளம்புகிறது.
இவர் என்ன பெரிய ஹாலிவுட் டைரக்டரா, வயதில் மூத்த நடிகர் செய்ற வேலையாக இது! என்று திரை பிரபலங்களும் ரசிகர்களும் கௌதம் மேனனை வறுத்தெடுக்கின்றனர். ஒரு இயக்குனராக எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் வித்தியாசமாக படத்தை ப்ரோமோட் செய்ய வேண்டும் என்று இப்படியா செய்வது என பல கேள்விகள் எழும்புவது போல் பிஸ்மியின் பதிவு வைரல் ஆகிறது.
கௌதம் மேனன் வைரல் பதிவு
