தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் அதன் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் ராஜேஷ். சினிமாவில் 47 வருட அனுபவம் நிறைந்த இவர் இதுவரை 150 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் சீரியல்களிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் தற்போது ஹாலிவுட்டில் கூட இப்படி ஒரு நடிகர் கிடையாது என்று தமிழ் நடிகர் ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார். நடிகர் ராஜேஷ் ஆரம்ப காலகட்டத்தில் சில பிரச்சனையால் அவருடைய வீடு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை அறிந்ததும் கமல் பதறிப்போய் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து பதஸ்தத்துடன் ராஜேஷ் இடம் கேட்ட அந்த தருணம் அவருக்கு இருந்த அக்கறையை காண்பித்ததாம். நான் உதவி செய்கிறேன் வேண்டுமானால் காசை கொடுத்துவிட்டு மறுபடியும் அந்த வீடு வாங்கிவிடலாம் என்று கேட்டாராம்.
அதுமட்டுமின்றி தான், சொன்ன ஒரே காரணத்திற்காக மூனு பொம்பள பிள்ளைகளை வைத்துக்கொண்டு கடனில் இருந்த ராஜ்கண்ணுக்கு உதவும் நோக்கத்தில், உலக நாயகன் மகாநதி படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட அந்த படத்தில் கமலஹாசனின் நடிப்பு அல்டிமேட் ஆக இருக்கும்.
அத்துடன் சூப்பர் ஹிட் அடித்து பல கோடி ரூபாய் லாபம் பார்த்த அந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக ராஜ்கண்ணு தன்னுடைய கடனை எல்லாம் அடைத்தாராம். இப்படிப்பட்ட உயரிய உள்ளம் கொண்டவர்தான் உலகநாயகன் கமலஹாசன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜேஷ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அத்துடன் ஹாலிவுட் கூட இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு 15 டாப் ஹீரோவின் திறமையை ஒட்டுமொத்தமாக வைத்திருக்கும் கமலஹாசன் கோலிவுட் கிடைத்த வரப்பிரகாசம் என்று உலக நாயகனை ராஜேஷ் புகழ்ந்து பேசி இருக்கிறார்.