இந்த மனுஷன திட்டாத நாளே இல்ல.. இப்ப ரஜினியை விட ஓபனிங் கலெக்சன்ல இவர் தான் கிங் என பல்டி அடித்த தயாரிப்பாளர்

Next Super Star: தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்ற போட்டி கடுமையாக நிலவி வருகிறது. அதிலும் ஓபனிங் கலெக்சனில் ரஜினியை விட இவர் தான் கிங் என பிரபல தயாரிப்பாளர் வெளிப்படையாக பேசிய பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் அந்த தயாரிப்பாளர் எந்த நடிகரை புகழ்ந்து பேசினாரோ, அந்த மனுஷனை ஒரு நாள் கூட திட்டாமல் இருந்ததில்லை அப்படிப்பட்டவரை ரஜினியுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியது இப்போது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் எதையும் நேரடியாக பேசக்கூடியவர், இவரை யாருக்கும் அவ்வளவு தெரியாது.

இவரை தெரிந்ததற்கு காரணம் இவர் அஜித்தை பற்றி தவறாக பேட்டிகளில் பேசி வருவார். அதனால் இவர் பெயர் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. இவர் அஜித்தை பற்றி திட்டாத நாளே இருக்காது, எப்போதுமே மீடியாவில் அவரை திட்டிக் கொண்டே இருப்பார். அப்படி இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசினார். அவரைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் பட்டம் மூன்று வகையாக பிரிக்க முடியும். நடிப்புல சூப்பர் ஸ்டார் கமலஹாசன், ஓபனிங் கலெக்சன் என்றால் அது அஜித் தான். மூன்று நாள்ல எல்லா படத்தின் மொத்த கலெக்சனையும் எடுத்துடறான்.

ஆனால் படம் நல்லா இருக்கு நல்லா இல்ல அதெல்லாம் அப்புறம் தான். வழக்கத்திற்கு மாறாக இப்போது அஜித்தை புகழ்ந்து பேசி பல்டி அடித்திருப்பது தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது அடுத்து விஜய்யும், ரஜினியும் புதுவிதமான போட்டியை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றி பெற்று விட்டார். அதை யார் முந்த போகிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தின் கலெக்சனை வைத்து சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவர் தகுதியானவரா என்பதை ஒப்பிடப் போகின்றனர்.