கமலுக்கு வைக்கப்பட்ட செக்.. சூதனமாக நடந்து கொண்ட வாரிசுகள்

Kamalhassan: கமலைப் பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்கள் வெற்றியை தோல்வியோ அதில் வரும் லாபம் நஷ்டங்கள் சினிமாவிலேயே சேர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அந்த வகையில் கமல் எடுக்கக்கூடிய படங்கள் முக்கால்வாசி வசூலில் சாதனை படைக்க வேண்டும் என்பதை தாண்டி காலத்துக்கும் நிற்கிற மாதிரி வரலாறு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி நடிக்க கூடியவர்.

அதனால் தான் அவர் நடித்த பல படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்து இருக்கிறது. இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காமல் கடன் வாங்கியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி இருக்கிறார். அந்த வகையில் ஏகப்பட்ட கடனில் சிக்கி தவித்துள்ளார். இதற்கிடையில் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணம் என்று எதுவுமே சேர்த்து வைக்காமல் சுத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது, தயாரிப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் இதுவரை எந்த பணத்தையும் சேர்த்து வைக்கவில்லை. இவருடைய இந்த நடவடிக்கையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது அக்ஷரா ஹாசன் மற்றும் சுருதிஹாசன். தற்போது இவர்களுக்கும் பெரிதாக சொல்லும் படி எந்த வாய்ப்புகளும் இல்லை.

அட்லீஸ்ட் அப்பா மூலமாக பணம் சொத்து இருக்கிறது என்றால் அதுவும் கேள்விக்குறியாக இருப்பதால், இப்பொழுது இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பயத்தை உண்டாக்கி விட்டது. அதனால் இனிமேல் கடனுக்காக கையெழுத்து போட்டு எந்த படத்தையும் பண்ணக்கூடாது என்று கமலிடம் சண்டை போட்டு வருகிறார்கள். ஆனால் இவர்கள் சொல்வதை கமல் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

அதனால் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் அத்தையாக இருக்கும் அனுஹாசன் மற்றும் சுகாசினிடம் பஞ்சாயத்துக்கு போயிருக்கிறார்கள். அவர்களும் கமலை கூப்பிட்டு பிள்ளைகள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இனி அவர்களுக்காக கொஞ்சம் யோசித்து பாருங்கள் இனிமேலும் கடன் வாங்கக்கூடாது, அவர்களுக்காக சேர்த்து வையுங்கள் என்று ஒரு செக் வைத்து விட்டார்கள்.

இதையெல்லாம் யோசித்த கமல் அனைவரது சொல்லுக்கு இணங்க தற்போது கப்பு சிப்பினு அடங்கி விட்டார். நான் வாங்கும் கடன் பிள்ளைகளை பாதிக்க கூடாது என்ற விஷயத்தில் இனி கடன் வாங்கி எதையும் பண்ண கூடாது என்று முடிவெடுத்து விட்டார்.