தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் யார் என்பது, தற்போது பெரும் சர்ச்சையை கிளப்புகிறது. அதிலும் சமீபத்தில் விஜய்தான் நம்பர் 1 நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டனர். அதற்கு ஒரு பெரிய சர்ச்சை வெடித்து பின் ஓய்ந்தது. அதேபோல் ஹீரோயின்களில் யார் சூப்பர் ஸ்டார் என்று பயங்கரமாக அடித்துக் கொள்கின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை அழைத்து வருகின்றனர். ஆனால் அது பிடிக்காமல் இரண்டு ஹீரோயின்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். நாங்களும் அவரோடு தான் நடித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் அவரைவிட அதிக படங்கள் ரிலீசாகிறது.
எங்களையும் மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அவங்களுக்கு மட்டும் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கிறீர்கள் என்று குழாயடி சண்டை போடாத குறைதான். அந்த ரெண்டு ஹீரோயின் வேறு யாருமில்லை திரிஷா மற்றும் தமன்னா தான்.
தமன்னாவை விட ஒரு படி மேலே சென்று திரிஷா நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு தான் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் சமந்தா இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான ராங்கி படத்தின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தியுள்ளார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஓரம் கட்டி விட்டு, நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே கோலிவுட்டில் முதலிடம் யாருக்கு என விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் பதவி நயன்தாராவிற்கு கொடுக்க முடியாது என நடிகைகளிடமும் குழாயடி சண்டை நடைபெறுகிறது.