விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல என்டர்டைன்மெண்ட் ஷோவான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இருப்பினும் கடந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனுக்கு நிகராக இந்த சீசனில் விக்ரமனை சோசியல் மீடியாவில் நேர்மையின் விதிவிலக்கு என புகழ்ந்த தள்ளுகின்றனர்.
இதைப் பார்த்ததும் காண்டான வத்திக்குச்சி வனிதா அவரை சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றின் மூலம் கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார். ரொம்ப நல்லவன் என்று சோசியல் மீடியாவில் புகழ்ந்த தள்ளுவதற்கு ஏற்ப அப்படி என்ன அவர் நல்லது செய்துவிட்டார்.
இவ்வளவு நாள் பிக் பாஸ் வீட்டில் அவர் தங்கி இருந்த வார சம்பளத்தையும், இனிமேல் அவர் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் பரிசுத் தொகையை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்கு தான் செலவு செய்வாரே ஒழிய மக்களுக்கு தான தர்மம் ஒன்றும் செய்ய மாட்டார்.
வேண்டுமானால் இப்பவே மக்களுக்கு அப்படி என்ன நல்லது செய்து விடுவார் என சொல்ல சொல்லுங்கள் என்று வெளிப்படையாக சவால் விட்டிருந்தார். இது எப்படியோ விக்ரமனுக்கு பிக் பாஸ் குழுவினர் மூலமாக தெரிந்திருக்கிறது. அதனால் நேற்று கமல் முன்பு விக்ரமன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஏனென்றால் பல வருடங்களாக விக்ரமன் ஏழைகளுக்கு உதவும் விதத்தில் இலவச சட்ட ஆலோசனை மையம் என்கிற டிரஸ்ட்டை ஆரம்பிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. அது நிச்சயம் இந்த வருடம் துவங்கி விடுவேன் என்று தன்னுடைய வாக்குறுதியை அளித்திருக்கிறார்.
பிரபல செய்தி வாசிப்பாளராக விக்ரமன் இந்த சீசனை ரசிகர்களை கவர்ந்தவர் என்றாலும் அவர்தான் வெற்றி பெற வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். இதனால் வயிற்று எரிச்சலில் திமிரு தனதுடன் பேசிக் கொண்டிருக்கும் வனிதாவிற்கு விக்ரமன் கமல் முன்பு சரியான பாடம் புகட்டி இருக்கிறார்.