ஆண்டவரின் ஆட்டம் ஆரம்பம்.. தக் லைஃப் ஹைலைட்

Thug Life : தக் லைஃப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில் இந்த படத்தில் உள்ள ஹைலைட்டான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவதாக மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியை தான் சொல்ல வேண்டும்.

நாயகன் என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கிறது. அடுத்ததாக தக் லைஃப் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது ஏ ஆர் ரகுமானின் இசை தான். தெனாலி படத்திற்குப் பிறகு கமல், ஏஆர் ரகுமான் இணைந்து இருக்கிறார்கள்.

மேலும் குழந்தை நட்சத்திரமாகவே கமல் மற்றும் சிம்பு சினிமாவில் நுழைந்து விட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் இப்போது தான் முதல் முறையாக ஒரே படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது.

தக் லைஃப் படத்தில் உள்ள ஹைலைட்டான விஷயங்கள்

அடுத்ததாக கமல் தக் லைஃப் படத்தில் அபிராமி, த்ரிஷா என இரண்டு நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்கிறார். அதுவும் 70 வயதில் லிப் லாக் காட்சியில் கமல் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ஹீரோவாக கமலும், வில்லனாக சிம்புவும் மிரட்டி இருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் ஒரே திரையில் சண்டை போடும் காட்சி பிரமிக்க வைக்கிறது. அசோக் செல்வன் போலீஸ் அதிகாரியும், நாசர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

எமனுக்கும் எனக்கும் நடக்கிற கதை, இனி இங்க நான் தான் ரங்கராய சக்திவேல் என பல மாஸ் டயலாக்குகள் இடம் பெற்று இருக்கிறது. ஆகையால் தியேட்டரில் செம ட்ரீட்டாக தக் லைஃப் இருக்கப் போகிறது என்பது ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது தெரிகிறது.