இசைப்புயல் ஏஆர் ரகுமான் தற்போது தமிழில் ஏராளமான படங்கள் இசை அமைத்த வருகிறார், கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா, சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளதால் படத்திற்கான ப்ரோமோஷன் படுஜோராக நடந்து வருகிறது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா போன்றோர் வெளிமாநிலங்களுக்கு சென்று ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏ ஆர் ரகுமானும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரமோஷனுகாக சில இடங்களுக்கு சென்று இருந்தார். அதில் அவர் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது.
அதாவது கொரோனா பரவலுக்குப் பிறகு ஓடிடி நிறுவனங்கள் தலைதூக்கி உள்ளது. பெரும்பாலான படங்கள் தற்போது ஓடிடியில் தான் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் பார்ப்பதைவிட ஓடிடி பார்ப்பது ஏதுவாக இருப்பதால் இதையே விரும்புகிறார்கள்.
இது பற்றி பேசிய ஏ ஆர் ரகுமான் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார். வேறு மொழிகளில் பிரம்மாண்டமாக எடுக்கும் அந்த படங்களை விட நமது ஊரில் இப்படி வரலாற்று கதைகளில் எடுக்கப்படும் படங்கள் அற்புதமாக உள்ளது.
அதுவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது, இதனால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று இப்படத்தைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார் ஏ ஆர் ரகுமான். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது.