Actor Sivakarthikeyan: இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு, மிஸ்கின் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ரிசல்ட் காக சிவகார்த்திகேயன் மிகவும் பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.
அதற்கு காரணம் இவர் கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் சரியாக ஓடவில்லை. அதனால் இப்படம் எப்படியாவது மக்களுக்கு பிடித்த மாதிரி ஆக வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடு செய்து ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து நடித்திருக்கிறார். அதற்கான முழு முயற்சியும் எடுத்திருக்கிறார் என்று இப்படத்தில் இவருடைய நடிப்பு பார்த்தாலே நன்றாக தெரிந்திருக்கும்.
அதே மாதிரி இதில் இவருடைய நடிப்புக்கு எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார். அத்துடன் இவருடைய ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை கொடுக்காமல் ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால் இப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து ஒரு சில விஷயங்கள் தற்போது சர்ச்சையாக போய்க் கொண்டிருக்கிறது. அதாவது இப்படத்தின் இயக்குனர் மடோன் அளித்த ஒரு பேட்டியில் இவர் எடுத்த கிளைமாக்ஸ் காட்சி நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு என்று ஆகியிருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
அதாவது இறுதி காட்சியில் “தான் ஆரம்பித்து வைத்த கதையை தானே முடித்து வைப்பதாக தான் மாவீரன் தீக்குள் மாட்டிக் கொண்டிருந்த இளவரசையை காப்பாற்றுவதாக” நினைத்து கதையை எழுதினேன். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கொஞ்சம் சொதப்பியதால் ரசிகர்களிடம் வேற மாதிரியாக போய்விட்டது.
அதாவது “இது தன்னுடைய கதை என்றும் அதை நான்தான் முடித்து வைக்க வேண்டும் என்பதற்காக தீயில் இறங்கி இளவரசியை காப்பாற்ற சென்றதாக” ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படியாக அமைந்துவிட்டது. ஆனால் நான் சொல்ல வந்தது அது இல்லை. இன்னும் கூட சிவகார்த்திகேயனை வேறு விதமாக காட்டி இருக்கலாம் என்று இயக்குனர் மண்டேலா அவருடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.